மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் உற்சாகத்தில் திளைத்த அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலத் தலைமையகத்திற்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை கையில் ஏந்தியிருந்த கட்சித் தொண்டர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டும், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியைப் பாராட்டியும், ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.
மேலும், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டதுடன், அவ்வழியே சென்றவர்களுக்கும் அவற்றை வழங்கினர். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
பல்வேறு விதிமீறல்களால் ஃபால்டா தொகுதியில் மட்டும் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பாஜக அறுதிப் பெரும்பான்மைக்கு மேலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிட்டதட்ட தோல்வி முகம் காணப்படுகிறது.
Summary
Ecstatic BJP workers broke into celebrations outside the party's state headquarters in Kolkata as the organisation was leading in the West Bengal assembly polls.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


