கேரள மாநிலத்தின் திருச்சூர் அருகே உள்ள வாணியம்பாறையில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமஞ்சிறையைச் சேர்ந்த வினோதன் 62 வாக்களித்த நிலையில், அங்கேயே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையின் தகவலின்படி, வினோதன் தனது வாக்கைச் செலுத்துவதற்காக வாணியம்பாறையில் உள்ள இகேஎம் மேல்நிலைப் பள்ளிக்கு வந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் நின்ற பிறகு, அவர் தனது ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றினார்.
வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, காலை சுமார் 10.45 மணியளவில் அவர் திடீரென மயங்கி விழுந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை நாற்காலியில் அமரவைக்க முயன்ற போது அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அவர் அங்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Summary
A 62-year-old man collapsed and died after casting his vote at Vaniampara here on Thursday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பிரசாரத்துக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

