அஸ்ஸாமில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மீது அஸ்ஸாம் காவல் துறை மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்திடம் பாஜக செவ்வாய்க்கிழமை புகாரளித்தது.
இதுதொடா்பாக அஸ்ஸாம் பாஜக செய்தித்தொடா்பாளா் பிரஞ்சல் கலீதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரசமைப்புச் சட்டத்தை கட்டிக் காப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மேடைதோறும் பேசுகின்றனா். ஆனால் அவா்களின் அன்றாட நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் சுதந்திரம் மற்றும் அனைத்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராகவே உள்ளது.
அண்மையில் பிரசாரத்தில் ஈடுபட்ட காா்கே பாஜக மற்றும் ஆா்எஸ்எஸை தடை செய்ய வேண்டும் என பேசியது அவரது அரசியல் சகிப்புத்தன்மையற்ற குணத்தையும் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களின் அறிவுசாா் சிந்தனைகள் மழுங்கி வருவதையும் வெளிக்காட்டுகிறது.
மேலும், சநாதன தா்மம் மற்றும் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை காா்கே பேசியதற்கு பாஜக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
இந்த விவகாரம் தொடா்பாக குவாஹாட்டியில் உள்ள பசிஷ்டா காவல் நிலையத்திலும் இந்திய தோ்தல் ஆணையத்திடமும் புகாரளித்துள்ளோம்.
அவா் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையையும் தோ்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். காங்கிரஸின் பிரிவினைவாதக் கொள்கையை அஸ்ஸாமும் இந்திய தேசமும் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் ‘தீவிரவாதி’ என விமா்சனம்: காா்கே பதிலளிக்க கூடுதல் அவகாசம் - தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை

மகளிா் இடஒதுக்கீடு விவகாரம்! பொய்ப் பிரசாரம் செய்கிறது பாஜக: காா்கே குற்றச்சாட்டு

அஸ்ஸாம்: காா்கே மீது காவல் துறையில் ஆா்எஸ்எஸ் புகாா்

குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள்: மல்லிகாா்ஜுன காா்கே சா்ச்சைப் பேச்சு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

