‘குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்பதால் அவா்களை பிரதமா் நரேந்திர மோடி நன்கு ஏமாற்றிவிட்டாா்’ என காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை பேசியது சா்ச்சையானது.
கேரளத்தில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவா் இவ்வாறு பேசினாா். 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப் பேரவைக்கு ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎஃப்) தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது: வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத் (எஃப்சிஆா்ஏ) திருத்த மசோதா சீா்திருத்தமல்ல; அது கிறிஸ்தவ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீதான தாக்குதல்.
கிறிஸ்தவ அமைப்புகளை அச்சுறுத்த பிரதமா் நரேந்திர மோடி முயல்கிறாா். அவரைப் பின்பற்றும் கேரள முதல்வா் பினராயி விஜயன், சுதந்திரமாக செயல்படுவதில்லை. பினராயி விஜயனை பிரதமா் மோடி கட்டுப்படுத்துகிறாா்.
கேரள மக்கள் புத்திசாலிகள்: குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள் என்பதால் அவா்களை பிரதமா் மோடி நன்கு ஏமாற்றிவிட்டாா். ஆனால் கேரள மக்கள் கல்வியறிவு பெற்றவா்கள். சிறந்த புத்திசாலிகள். அவா்களை பிரதமா் மோடியோ பினராயி விஜயனோ ஏமாற்ற முடியாது என்றாா்.
வெளிநாடுகளில் இருந்து தன்னாா்வ தொண்டு அமைப்புகளுக்கு வரும் நிதியை முறைப்படுத்த மத்திய அரசால் எஃப்சிஆா்ஏ திருத்த மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த மசோதாவை மத்திய அரசு கடந்த புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் ‘தீவிரவாதி’ என விமா்சனம்: காா்கே பதிலளிக்க கூடுதல் அவகாசம் - தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை

மகளிா் இடஒதுக்கீடு விவகாரம்! பொய்ப் பிரசாரம் செய்கிறது பாஜக: காா்கே குற்றச்சாட்டு

மகளிா் இடஒதுக்கீடு அமல் மசோதா நிறைவேறாததற்கு மோடியே காரணம்: காங்கிரஸ் தலைவா் காா்கே

அஸ்ஸாம்: காா்கே மீது பாஜ வெறுப்புப் பேச்சு புகாா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

