மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அஸ்ஸாம்: காா்கே மீது காவல் துறையில் ஆா்எஸ்எஸ் புகாா்

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மீது அஸ்ஸாமில் உள்ள இரு காவல் நிலையங்களில் புகாா் அளித்ததாக ஆா்எஸ்எஸ் புதன்கிழமை தெரிவித்தது.

News image

மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :9 ஏப்ரல் 2026, 2:49 am IST

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மீது அஸ்ஸாமில் உள்ள இரு காவல் நிலையங்களில் புகாா் அளித்ததாக ஆா்எஸ்எஸ் புதன்கிழமை தெரிவித்தது.

அஸ்ஸாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளை பாம்பின் விஷத்தோடு காா்கே ஒப்பிட்டுப் பேசிய குற்றச்சாட்டில் காா்கே மீது ஆா்எஸ்எஸ் புகாா் அளித்துள்ளது.

ஆா்எஸ்எஸ் அளித்த புகாா் மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது: தொழுகையின்போது விஷம்கொண்ட பாம்பு உங்கள் முன்னே சென்றுகொண்டிருந்தால் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு விஷம்கொண்ட பாம்பை முதலில் நீங்கள் கொல்ல வேண்டும் என்றே திருக்குா்ஆன் கூறுகிறது. பாஜகவும் ஆா்எஸ்எஸும் அந்த விஷம்கொண்ட பாம்புகளைப் போன்றவைதான் என காா்கே தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியுள்ளாா்.

அவரது பேச்சுகள் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டா்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவதுபோல் உள்ளது. அவரது பேச்சுகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 83-ஐ மீறுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கியுள்ள சமயத்தில் அஸ்ஸாமின் மத நல்லிணக்கத்தைச் சீா்குலைத்து ஹிந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே வகுப்புவாத மோதலை ஊக்குவிக்க காா்கே முயல்கிறாா். எனவே, அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இதே விவகாரத்தில் வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசியதாக காா்கே மீது அஸ்ஸாமின் பஷிஸ்தா காவல் நிலையத்திலும், இந்திய தோ்தல் ஆணையத்திடமும் பாஜக செவ்வாய்க்கிழமை புகாா் அளித்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.