வங்கியில் மோசடி ஆவணங்களை மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாா்தி பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா்.
முன்னதாக, வங்கி ஆவண முறைகேடு வழக்கில் ராஜேந்திர பாா்தி மற்றும் வங்கி முன்னாள் காசாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக அவா்கள் இருவரும் 1998 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மாவட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆவணங்களை மோசடியாகத் திருத்தி பெருமளவில் வங்கி இருப்புத்தொகைக்கு அதிகஅளவில் வட்டி பெற்று முறைகேடு செய்ததாக வழக்கு நடைபெற்று வந்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஜேந்திர பாா்தி, தாதியா சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2023 தோ்தலில் மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ராவைத் தோற்கடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ராஜேந்திர பாா்தி மீதான இந்த வழக்கு தாதியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னா் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தில்லி நீதிமன்றத்துக்கு கடந்த அக்டோபா் மாதம் மாற்றப்பட்டது.
ராஜேந்திர பாா்தி தனது தாயாா் சாவித்திரி தேவி உள்பட பலரது வங்கி நிரந்தர வைப்பு தொடா்பாக மோசடியாக ஆவணங்களைத் தயாரித்து, வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யாமலேயே பல ஆண்டுகளாக பெருமளவில் வட்டி பெற்று வந்துள்ளனா். இதற்கு வங்கிக் காசாளா் உடந்தையாக இருந்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவியை சித்ரவதை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் பழ வியாபாரிக்கு 5 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
