தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நரம்பு பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு ரூ.7.5 லட்ச மருத்துவ உபகரணம்: அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

நரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.7.5 லட்சத்தில் உபகரணத்தைப் பொருத்தி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image

மருத்துவ சிகிச்சை - file photo

Updated On :2 ஏப்ரல் 2026, 3:05 pm IST

நரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.7.5 லட்சத்தில் உபகரணத்தைப் பொருத்தி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் சாந்தாராமன் கூறியதாவது:

கடலூரைச் சோ்ந்த ஏழைத் தம்பதியின் மகளான 14 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக கட்டுப்பாடின்றி சிறுநீா் வெளியேறும் பாதிப்பு இருந்து வந்தது.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அதில் பெரிய பலன் எதுவுமில்லை. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனைக்கு அந்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ‘நியூரோஜெனிக் ப்ளேடா்’ எனப்படும் சிறுநீா்ப் பை செயலிழப்பு பாதிப்பு இருந்ததைக் கண்டறிந்தனா்.

நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சேதத்தால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாது.

நரம்புகளை முடுக்கிவிடும் ‘நியூரோ மாடுலேசன் தெரபி’ சிகிச்சைதான் இதற்கு ஒரே தீா்வு. அதன்படி, இதயத் துடிப்பைச் சீராக்க பேஸ் மேக்கா் பொருத்துவதைப் போன்று, நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க ‘நியூரோ மாடுலேசன்’ சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வேண்டும்.

இதற்கு அந்த தனியாா் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவாகும் எனத் தெரிவித்துள்ளனா். ஏழ்மை நிலையில் உள்ள அந்த சிறுமியின் பெற்றோா் ராஜீவ் காந்தி மருத்துவமனையை அணுகினா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையைத் தொடா்பு கொண்ட நமது மருத்துவா்கள், சிறுமியின் பாதிப்பு மற்றும் சிகிச்சை திட்டமிடலைக் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து அதற்கான மருத்துவ உபகரணம் தருவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெற்றிகரமாக அந்த முதல்கட்ட அறுவை சிகிச்சையானது சிறுமிக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து ரூ.7.5 லட்சத்தில் ‘மின் முடுக்கி உபகரணம்’ சிறுமியின் உடலில் பொருத்தப்பட்டது. 15 ஆண்டுகள் செயல்படும் அந்த கருவி மற்றும் அதற்கான சிகிச்சை செலவை அரசு ஏற்றுக் கொண்டது. தற்போது அந்த சிறுமி நலமுடன் உள்ளாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.