மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை மமதா வரவேற்பதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப். 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்கம், அலிபுர்துவார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அஸ்ஸாம் முதல்வர், “இந்தியா - வங்கதேச எல்லையில் வேலி அமைக்க மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அரசு அனுமதிப்பதில்லை.
அஸ்ஸாம் மற்றும் திரிபுரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவல்காரர்களை அனுமதிக்காத நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அவர்களை வரவேற்கிறார்.
சட்டவிரோத குடியேற்றத்தால் மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால், மாநிலத்தில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதேவேளையில், வங்கதேச இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஏப்.9 ஆம் தேதி நடைபெற்ற அஸ்ஸாம் பேரவைத்தேர்தலில் 85.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Assam Chief Minister Himanta Biswa Sarma has stated that Mamata welcomes infiltrators in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா, பினராயி முன்னிலை! ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு!
மேற்கு வங்கம்: பாஜக - 177, திரிணமூல் - 107; பவானிபூரில் மமதா மீண்டும் முன்னிலை!

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


