தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மேற்கு வங்கம்: பாஜக - 177, திரிணமூல் - 107; பவானிபூரில் மமதா மீண்டும் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மமதா பானர்ஜி முன்னிலை...

News image

மமதா பானர்ஜி - X/ TMC

Updated On :4 மே 2026, 11:44 am IST

மேற்கு வங்கத்தில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மமதா பானர்ஜி தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப். 23 ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் காலை 11 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்று வருகிறது. பாஜக - 177, திரிணமூல் காங்கிரஸ் - 107, காங்கிரஸ் - 0, இடதுசாரி - 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மமதா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் 3 ஆம் சுற்று முடிவில் முன்னிலை வகித்து வருகிறார்.

பவானிபூர் தொகுதியில் 3 ஆம் சுற்று முடிவில் மமதா 9,359 வாக்குகளும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி 8,461 வாக்குகளும் பெற்றுள்ளனர். 898 வாக்குகள் வித்தியாசம்.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பவானிபூர் மற்றும் நந்திகிராம் என இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

மேற்குவங்கத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Summary

West Bengal Results: Mamata Banerjee Back In Lead, Suvendu Adhikari Trails

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.