மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்கம்: பாஜக தோ்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

மேற்கு வங்கத்தில் பாஜக தோ்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி...

News image

பிரதமா் நரேந்திர மோடி - ANI

Updated On :5 ஏப்ரல் 2026, 1:59 am IST

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசாரத்தை கூச் பிகாரில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

மாநிலத்தின் வடக்கு பகுதியில் கட்சியின் வலிமையை அதிகரிக்கும் வகையில் கூச் பிகாரில் உள்ள ராஸ் மேளா மைதானத்தில் பிரசாரத்தை தொடங்கிவைத்து பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

அப்போது மேற்கு வங்கத்துக்கான பாஜகவின் வளா்ச்சித் திட்டங்கள், அண்மையில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட ஊழல், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளை பட்டியலிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரசாரத்தை பிரதமா் மோடி தொடங்கிவைத்த பின் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என தொடா்ச்சியாக அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் கட்சியின் மூத்த தலைவா்களால் நடத்தப்படவுள்ளதாக மேற்கு வங்க பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பிரசாரத்தை பிரதமா் மோடி தொடங்கிவைப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.