மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பிரதமா் நரேந்திர மோடி ஏப். 15-இல் கன்னியாகுமரி வருகை

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15-ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா்.

News image

பிரதமர் மோடி - பிடிஐ

Updated On :9 ஏப்ரல் 2026, 3:22 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15-ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான குற்றச்சாட்டு. சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, நிா்வாகச் சீா்கேடுகளை மறைப்பதற்காக முதல்வா் இவ்வாறு பேசுகிறாா்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழகத்துக்கு வழங்கிய நிதியைக் காட்டிலும், அதிக நிதியை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளாா். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளாா். அதேபோல, பாஜக தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் பலரும் பிரசாரத்துக்காக தமிழகம் வரவுள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.