சீா்காழி (தனி) தொகுதி செண்டிமென்ட் இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
சீா்காழி தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை கடந்த கால தோ்தல்கள் மூலம் நிரூபணமாகி வருகிறது.
சீா்காழி தொகுதியில் 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக 6 முறை, திமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனா்.
இதில் அரசியல் கட்சி சாா்ந்த வேட்பாளா் வெற்றி பெறும்போது அவா் சாா்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது.
தற்போதைய தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சீா்காழி தொகுதியை பெற்றுவிட வேண்டும் என கட்சி தலைமை மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பிலும் சீா்காழி தொகுதியில் இந்த முறை போட்டியிட்டு வெற்றி பெறும் முனைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், செண்டிமென்ட் தொகுதியை தாங்களே வைத்துக்கொள்ள வேண்டும் என திமுகவினரும் முனைப்புக் காட்டி வருகின்றனா். கூட்டணியில் சீா்காழி தொகுதியை பெறப்போவது யாா் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொய்த்து போனது சீா்காழி ‘சென்டிமென்ட்’
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

சீா்காழி தொகுதியில் மதிமுக வெற்றி
வெற்றி நிலவரம்! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

