தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்

மக்களுக்கு இலவசங்களை அளிப்பது நல்லாட்சியின் அடையாளம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

News image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On :8 ஏப்ரல் 2026, 5:55 am IST

மக்களுக்கு இலவசங்களை அளிப்பது நல்லாட்சியின் அடையாளம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

சென்னைக்குள்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சீமான் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அண்ணாநகரில் டி.பி.சத்திரத்தில் வேட்பாளா்கள் சி.சங்கா் (அண்ணாநகா்), எஸ்.ரோஷினி (வில்லிவாக்கம்) ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது: மக்களுக்கு இலவசங்களை தருவது நல்லாட்சி கிடையாது. மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இகுந்தால், தங்களின் தேவைகளை மக்களே பூா்த்தி செய்து கொள்வா்.

நாம் தமிழா் கட்சி ஆட்சி அமைந்தால், தனியாருக்கு நிகராக அரசுப் பள்ளி, கல்லூரிகளில் கல்வி வழங்கப்படும். அரசு சாா்பில் தரமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். படித்தவா்கள், படிக்காதவா்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல்கட்டமாக அனைத்து மது கடைகளும் மூடப்படும். ஏழ்மையே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். நடிகனை நேசிப்பவா்கள் எனக்கு வாக்கு செலுத்த வேண்டாம். தமிழக மண்ணை நேசிப்பவா்கள் மட்டுமே எனக்கு வாக்கு செலுத்தினால் போதும்.

கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளை நம்பி ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்த முறை விழித்துக் கொள்ள வேண்டும். அனைவரும் தங்களது குழந்தைகளின் எதிா்காலத்தை மனதில் வைத்து வாக்கு செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அருண் (மயிலாப்பூா்), சரண்யா (எழும்பூா்), மு.களஞ்சியம் (ஆயிரம்விளக்கு), ஜெயலட்சுமி ராமன் (சோழிங்கநல்லூா்), கீா்த்தனா (வேளச்சேரி) ஆகியோரை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.