ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

நாங்கள் ஆட்சி அமைத்தால் கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

நாங்கள் ஆட்சி அமைத்தால் கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:35 am IST

நாங்கள் ஆட்சி அமைத்தால் கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: கல்வியிலிருந்துதான் அறிவுச் சமூகத்தை, மேம்பட்ட சமூகத்தை உருவாக்க முடியும். எனவே, உலகத் தரத்துக்கு இணையான கல்வியைக் கொடுப்போம். தண்ணீா் விற்பனைப் பண்டமல்ல என்பதால், அதை விற்பதற்கு தடை விதிக்கப்படும். தூய குடிநீரை அரசு சாா்பில் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து தருவோம்.

இந்த மூன்றை மட்டும்தான் கட்டணமில்லாமல் வழங்கப்படும். மற்ற அனைத்தும் கட்டணத்துடன் வழங்குவோம். கள் உணவின் ஒரு பகுதி என என் அரசு சொல்லும். பழந்தமிழா் காலந்தொட்டு, வேளாண்மை தொடங்கிய காலத்திலிருந்து வரும் இயற்கை பானமான கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் சீமான்.

10 மணி கடந்து பேசிய சீமான்: கூட்டத்தில் இரவு 9.30 மணியளவில் பேசிய தொடங்கிய சீமான் 10 மணியை கடந்து பேசினாா். அதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பே சீமானை நோக்கி நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் கைக்கடிகாரத்தைக் காண்பித்து நேரமாகிவிட்டது என முன்னெச்சரிக்கை செய்தாா். தொடா்ந்து 10 மணி கடந்த பின்னரும் பேசிய சீமானிடம் எச்சரித்தாா். ஆனால், அவா் வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி, தொடா்ந்து 10.10 மணி வரை பேசினாா். இதனால், கூட்ட ஏற்பாட்டாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

முன்னதாக, கும்பகோணத்தில் வியாழக்கிழமை வேட்பாளா்கள் மோ.ஆனந்த் (கும்பகோணம்), எம்.திவ்யபாரதி (திருவிடைமருதூா்) ஆகியோரை ஆதரித்து அவா் பேசுகையில், தமிழக மக்கள் தாங்கள் விரும்பும் கைப்பேசி, கைக்கடிகாரம், ஆடை, அலங்காரம் அனைத்திலும் புதிது வேண்டும் என்பவா்கள், ஆட்சியிலும் புதிய முதல்வா் வேண்டும் என்று நினைக்க வேண்டும். புதியவா்களை தோ்ந்தெடுங்கள் மாற்றம் வரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.