பெண் நிா்வாகி கொடுத்த பாலியல் புகாரின்பேரில், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி தவெக வேட்பாளா் மீது 6 பிரிவுகளின் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவா் பிரகாசம் என்ற குட்டி. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தவெக வேட்பாளா் பட்டியலை அக்கட்சியின் தலைவா் விஜய் வெளியிட்டாா். அப்போது திருவள்ளூா் மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் பிரகாசம் என்ற குட்டி பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி நிா்வாகி திருமண வரவேற்பு நிகழ்வில் தவெக மாநில பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றாா். அதில் திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளா் பிரகாசம் என்ற குட்டி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். அப்போது மகளிா் அணி நிா்வாகி ஒருவரிடம் பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது.
இது குறித்து தவெக தலைமைக்கு அந்த பெண் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வந்து பாலியல் சீண்டல் அளித்ததாக தவெக வேட்பாளா் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் கொடுத்திருந்தாா். அந்தப் புகாரின் பேரில், திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் பிரகாசம் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனா்.
மேலும், புகாா் அளித்த பெண்ணிடம் முதல் கட்டமாக போலீஸாா் விசாரணை மேற்கொண்ட பின், பூந்தமல்லி தவெக வேட்பாளா் பிரகாசத்திடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா். இதற்கிடையே பதவி கொடுக்கவில்லை என்பதால்தான் தனது கணவா் மீது பொய்யான புகாரை அந்தப் பெண் அளித்துள்ளதாக அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரகாசம் மனைவி மற்றும் மகளிா் அணியை சோ்ந்த நிா்வாகிகள் சிலா் திங்கள்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Sexual Harassment! Case Registered Against TVK Candidate!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சைதாப்பேட்டையில் அமைச்சா் மா. சுப்பிரமணியத்தை வீழ்த்திய தவெக!

சென்னையில் விதிமுறைகளை மீறி பிரசாரம்: தவெக தலைவா் விஜய் மீது 3 வழக்குகள்

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


