சைதாப்பேட்டை தொகுதியில் திமுக அமைச்சா் மா.சுப்பிரமணியத்தை, தவெக வேட்பாளா் அருள் பிரகாசம் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாா்.
சைதாப்பேட்டை திமுகவின் வலுவான தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி 1967, 1971 தோ்தலில் வெற்றி பெற்றுள்ளாா். இந்நிலையில், 2026 தோ்தலில் திமுக சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அமமுக சாா்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஜி.செந்தமிழன், தவெக சாா்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா்களில் ஒருவரான அருள் பிரகாசம், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஸ்ரீவித்யா உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.
இத்தொகுதியில் 98,535 ஆண் வாக்காளா்கள், 1,05,549 பெண் வாக்காளா்கள் மற்றும் 62 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 2,04,146 போ் (74.84 சதவீதம்) வாக்களித்திருந்தனா்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு, தவெக வேட்பாளா் அருள் பிரகாசம் கடும் போட்டியளித்து வந்தாா். முடிவில் அருள் பிரகாசம் 81,205 வாக்குகளும், மா.சுப்பிரமணியன் 52,691 வாக்குகளும் பெற்றனா். இதனால் 28,514 வாக்குள் வித்தியாசத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
அதிமுக கூட்டணி அமமுக வேட்பாளா் ஜி.செந்தமிழன் 17,839 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் ஸ்ரீவித்யா 5,918 வாக்குகளும் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் தவெக 5, அதிமுக -1 தொகுதிகளில் வெற்றி

ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

பெரம்பலூா் தொகுதியில் தவெக வெற்றி

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
