தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வி. செந்தில்பாலாஜிக்கு எதிராக வி. செந்தில்குமாரை களமிறக்கிய தவெக!

கோவை தெற்கில் களமிறக்கப்பட்டுள்ள தவெகவின் வி. செந்தில்குமார் பற்றி...

News image

செந்தில் பாலாஜி - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 1:41 pm IST

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜிக்கு எதிராக தவெக தரப்பில் வி. செந்தில்குமார் என்ற வேட்பாளரை களமிறக்கியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. கடந்தாண்டு கரூரில் நடைபெற்ற தவெக விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் 42 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு காரணமாக, தவெக தலைவர் விஜய்க்கு ஒரு தரப்பினரும், திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜிக்கு மற்றொரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சொந்த தொகுதியான கரூரை விட்டுவிட்டு கோவை தெற்கில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக மாறியது.

கரூர் சம்பவத்தில் கிளம்பிய எதிர்ப்பால் செந்தில்பாலாஜி தொகுதி மாறியதாக என்று எதிர்க்கட்சிகளும், கோவை தெற்கில் முதல்முறையாக திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவர் தொகுதி மாறியதாக ஆளுங்கட்சி தரப்பும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெகவின் கோவை தெற்கு வேட்பாளராக அக்கட்சியின் நிர்வாகி வி. செந்தில்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை, மக்களவை உள்ளிட்ட தேர்தல்களில் நட்சத்திர வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குகளை சிதற வைக்கும் நோக்கத்தில், அவர்கள் பெயர்களில் பல சுயேச்சைகள் போட்டியிடுவது தொடர் கதையாக உள்ளது.

கோவை தெற்கில் களமிறக்கப்பட்டுள்ள தவெக வேட்பாளர் வி. செந்தில்குமார், வி. செந்தில்பாலாஜியின் வாக்குகளை பிரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை தெற்கில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜகவின் வானதி சீனிவாசன். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு கோவை தெற்கும், பாஜகவுக்கு கோவை வடக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை கோவை வடக்கில் வென்ற அம்மன் அர்ஜுனன், தற்போது கோவை தெற்கின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Summary

TVK Fields V. Senthilkumar Against V. Senthilbalaji!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.