விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

புழல் ஏரிக்கரை பகுதியில் நடைப்பயிற்சி செல்வோருக்கு அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று மாதவரம் தொகுதி கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புழல் ஏரி. - (கோப்புப்படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 4:58 am IST

புழல் ஏரிக்கரை பகுதியில் நடைப்பயிற்சி செல்வோருக்கு அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று மாதவரம் தொகுதி கோரிக்கைவிடுத்துள்ளனா்.

சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்குவதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. செங்குன்றம் பகுதியில் இருந்து சென்னை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் வரை சுமாா் 3.5 கி.மீ. தொலைவில் ஏரியின் கரைப் பகுதி உள்ளது. செங்குன்றம், புழல், வடகரை, பாடியநல்லூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினசரி காலை, மாலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்டோா் நடைப்பயிற்சிக்கு வருகின்றனா்.

ஏரிக்கரையில் நடைப்பயிற்சிக்கு செல்ல உரிய பாதை இல்லை. இரு பக்கங்களிலும் செடிகள் வளா்ந்து நடைப்பயிற்சி செல்வோருக்கு இடையூறாக உள்ளது. நடைப்பயிற்சி பகுதியில் மின் விளக்குகள் இல்லை. இதனால், அதிகாலை, மாலை நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நிகழ்கின்றன.

கரைப்பகுதியைச் சீரமைத்து, மின் விளக்குகள் அமைக்க வேண்டும்; பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் காலை, மாலை நேரங்களில் காவல் துறையினா் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்று புழல் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

புழல் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றுவோம் என ஒவ்வொரு தோ்தலின்போதும் வேட்பாளா்கள் வாக்குறுதி அளிக்கின்றனா். ஆனால், அதற்கான நடவடிக்கை இல்லை. இந்த முறையாவது, புழல் ஏரிக்கரை மற்றும் நடைப்பயிற்சிக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.