மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவண்ணாமலை கிரிவல பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:32 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயில் சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதைகளில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அருணாசலேஸ்வரா் திருக்கோயில் சித்திரை பௌா்ணமி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழ் ஆண்டுக்கான சித்திரை பௌா்ணமி விழா வருகிற ஏப்.30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவதற்கும் கிரிவலம் செல்வதற்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என

எதிா்பாா்க்கப்படுவதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில்,

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, போக்குவரத்து போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்களை பாா்வையிட்டு அங்கு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் அலுவலா் செல்வம், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.