நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
பொதுவாகவே நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளின்போது மாணவர்களிடம் காட்டப்படும் கெடுபிடிகள் பேசுபொருளாகி வரும் நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் ஓரளவுக்கு அதற்கேற்ப மாறி வருகிறார்கள்.
நீட் தேர்வர்கள், வெளியில் தெரியும்படியான குடிநீர் பாட்டில் கொண்டு வரலாம்.
மத நம்பிக்கைக்கு உரிய அடையாளச் சின்னங்களை அணிந்து வருவதாக இருந்தால், முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வந்து அது பற்றி தெரிவிக்க வேண்டும்.
கைவைத்த சட்டைகள் அணியலாம். சாதாரண ஆடைகள், கால்களை முழுமையாக மறைக்காத தளர்வான காலணிகளை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கால்களை மூடிய காலணிகளை அணிந்து வந்தால் அவற்றை தேர்வுக்கூடத்துக்கு வெளியே விட்டுவிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நுழைவுத் தேர்வ பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றாலும்கூட, மாணவர்கள் பமுற்பகல் 11 மணி முதல் நுழைவுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்கு மேல் வரும் யாரும் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பெரும்பாலும் மாணவிகளும் தலையை வெறுமனே வாரி பின்னி வைத்துக் கொள்ளலாம்.
சில தேர்வுக் கூடங்களில் சுருட்டை முடி இருப்பவர்களை தேர்வுக்கூட சோதனையாளர்கள் கூடுதலாக சோதனை செய்வதும் நிகழ்கிறது. இதற்காக சுருட்டை முடி இருப்பவர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. வழக்கமான ஒன்றுதான் என்று அறிந்துகொள்ளுங்கள்.
முக தோற்றத்தையே மாற்றும் அல்லது நுழைவுக் கூட அனுமதிச் சீட்டில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்தானா என்பதையே சந்தேகிக்கும் வகையிலான முடி திருத்தம் அல்லது முடி அலங்காரம் செய்வதை மாணவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.
மற்றபடி, மாணவர்கள் முடி திருத்தம் செய்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை.
ஒருவேளை, நீண்ட சடையுடன் இருக்கும் புகைப்படம் நுழைவுச் சீட்டில் இருந்து, பாய் கட்டில் அந்த மாணவி உள்ளே நுழையும்போது நிச்சயம் சந்தேகம் ஏற்படும். இதுபோன்ற மாற்றங்களைத் தவிர்ப்பது நலம்.
Summary
Attention NEET candidates with curly hair! Are there any restrictions on cutting hair?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் நுழைவுத் தேர்வு நிறைவு! இயற்பியல், வேதியியல் கடினம்?

இளநிலை நீட் தேர்வு! தயாராகக் காத்திருக்கும் மாணவர்கள்! | NEET

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு கூகுள் சோதனை!
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


