தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) தேர்வைத் தமிழில் எழுத விண்ணப்பித்த தேர்வருக்கு நாகர் மொழியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தி அனுமதிச் சீட்டு இருந்தால் எப்படியிருக்கும்?
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும் மே 3 ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்குத் தற்காலிக அனுமதி அட்டைகள் இணையவழி அனுப்பப்பட்டுள்ளன.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டை ஒரு சேவை மையத்தில் பதிவிறக்கம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரருக்கு அதிர்ச்சியொன்று காத்திருந்தது. ஏனெனில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் தேர்வு மொழியாக அவர் கேட்டிருந்தது – தமிழ். ஆனால், நுழைவு அட்டையில் வினாத் தாளின் மொழி என்ற இடத்தில் நாகர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மாணவ, மாணவிகள் எழுதலாம். இந்த 13 மொழிகளின் பட்டியலில் எங்கேயும் நாகர் மொழி என்று எதுவும் இடம் பெறவில்லை.
ஆனால், நுழைவு அட்டையில் வினாத் தாளின் மொழி என்ற இடத்தில் நாகர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அல்லாமல் இந்த நுழைவு அனுமதி அட்டையில் வேறு சில நகைச்சுவைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
தேர்வு எழுதுபவரின் - மாணவ, மாணவி பெயர் இடம் பெறும் இடத்தில் கேன்டிடேட் நேம் (Candidate Name) என்பதற்குத் தமிழில் தேர்வர் என்பதற்குப் பதிலாக (தேர்தல் நேரம் என்பதாலோ என்னவோ?) வேட்பாளரின் பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; பரவாயில்லை.
பாலினம் என்ற இடத்தில் ஆண் அல்லது பெண் என்று இருப்பதற்குப் பதிலாக திருமணம் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண், திருநர், திருநங்கை உண்டு, இது ஏதோ புது இனம்!
டெஸ்ட் டீடெய்ல்ஸ் (Test Details) என்பதைத் தேர்வு விவரங்கள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சோதனை விவரங்கள் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். இருக்கட்டும், நாகர் மொழியில் தேர்வை வேட்பாளர் எழுதுவது எப்படி?
தமிழுக்கு ஏன் இந்த சோதனை என்று விசாரிக்க முற்பட்டபோதுதான் தெரிய வந்தது, எல்லாம் கூகுள் தானாக மொழிபெயர்த்துத் தமிழில் தந்ததால் நேரிட்ட வில்லங்கம் என்பது!
அனுமதி அட்டையைப் பின்னர், ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யும்போது தேர்வரின் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் சரியாகவே இடம் பெற்றிருக்கின்றன.
தமிழும் இடம் பெற்றுள்ள கணினிகளின் வழி பதிவிறக்கம் செய்யும்போது, தகவல்கள் எல்லாமும் தானாகத் தமிழுக்கு 'முழி'பெயர்க்கப்பட்டு நாகர் உள்பட அனைத்தும் தன்னிஷ்டத்துக்கு வந்துவிழுகின்றன.
இன்னும் எத்தனை மாணவ, மாணவியர் நீட் தேர்வு அனுமதி அட்டையைத் தமிழில் பதிவிறக்கம் செய்து பார்த்துப் பதறிக் கொண்டிருக்கிறார்களோ?
Summary
Regarding the inclusion of Nagar as the language of the question paper in the NEET admit card...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தெரியும்! அது என்ன நாட்டா தேர்வு? யார் எழுத வேண்டும்?
நீட் மறுதேர்வு: மாணவர்கள் அச்சம் பதற்றமின்றி தேர்வெழுத வேண்டும்: தர்மேந்திர பிரதான்

நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்

நீட் மறுதேர்வு மன அழுத்தம்! கோவையில் மாணவி தற்கொலை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

