நாட்டில் கட்டடக் கலை தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் நாட்டா (NATA) தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
எனவே, பிஆர்க் எனப்படும் கட்டடக் கலையில் இளநிலை அல்லது முதுநிலை கல்வி பயில விரும்பும் மாணவர்கள் நாட்டா தேர்வை எழுத வேண்டும். தேசிய ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் - என்ஏடிஏ எனப்படுகிறது. இதனை கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர் என்ற அமைப்பு நடத்துகிறது.
மாணவர்களின் வரையும் ஆற்றல், தர்க்கரீதியான சிந்தனை போன்றவற்றை மதிப்பிடும் வகையில் தேர்வு இருக்கும். பல கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
கணிதம், இயற்பியல், வேதியியல், பொது அறிவு மற்றும் வரைதல் திறன் கண்டறிவது என்ற வகையில் தேர்வு நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 200. 70 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்படும். இந்த தேர்வை எழுத மொத்த கால அவகாசம் 3 மணி நேரங்கள்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேர்வு நடைமுறைகள் என அனைத்தையும் மாணவர்கள் https://www.nata.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வும் நாட்டில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் ஒன்றுதான் நாட்டா என்பதால், அடுத்த ஆண்டு தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இன்று முதலே அதற்குத் தயாராக வேண்டியது அவசியம்.
நாட்டா பற்றி..
நாட்டா தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில், NATA என்பது பல்வேறு தேர்வு முறைகள் மூலம் ஒரு விண்ணப்பதாரரின் இயல்பான திறனை மதிப்பிடும் ஒரு தகுதித் தேர்வாகும்; இதனைப் பயிற்சியின் மூலமோ அல்லது கற்றல் மூலமோ பெறவோ அல்லது செயற்கையாக உருவாக்கவோ முடியாது.
குறிப்பிட்ட கல்வித் துறையான கட்டடக்கலை (Architecture) சார்ந்த துறையில் விண்ணப்பிக்கும் மாணவரின் திறனை இத்தேர்வு அளவிடுகிறது.
இதற்காக, கடந்த சில ஆண்டுகளில் அந்தத் துறை தொடர்பாக விண்ணப்பதாரர் பெற்ற அறிவுடன், அறிவாற்றல் திறன்கள், காட்சிப் புலன் உணர்வு மற்றும் அழகியல் உணர்திறன், தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் விமர்சன ரீதியான சிந்தனைத் திறன் ஆகியவையும் சோதிக்கப்படுகின்றன என்று பதிவிடப்பட்டுள்ளது.
Summary
Know about NEET But what is this NATA exam? Who needs to take it?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வு: சென்னையில் ஜூன் 23இல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்
நீட் மறுதேர்வு: மாணவர்கள் அச்சம் பதற்றமின்றி தேர்வெழுத வேண்டும்: தர்மேந்திர பிரதான்

நீட் மறுதேர்வு மன அழுத்தம்! கோவையில் மாணவி தற்கொலை

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்! நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த என்டிஏ உறுதி!
விடியோக்கள்

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

