நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கிய தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் மனநலமும் ஆரோக்கியமும்தான் எங்களுக்கு முன்னுரிமை. உங்கள் உயிரைவிட எந்தத் தேர்வுகளும் முக்கியமில்லை.
நீங்கள் மன அழுத்தம், கவலை அல்லது வேறு ஏதேனும் அதிக அழுத்தத்தில் இருந்தால், தயவுசெய்து உதவி மையங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் தனியாக இல்லை, உங்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்கும். உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களை நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், 24X7 நேரமும் செயல்படும் தேசிய மனநல உதவி மைய எண்களான 14416 அல்லது 1-800-891-4416 என்ற எண்களில் இலவச, ரகசிய ஆலோசனை பல மொழிகளிலும் கிடைக்கிறது.
நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள், neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து, நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
Summary
NEET UG 2026: No exam is more important than your life, says NTA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் நுழைவுத் தேர்வு நிறைவு! இயற்பியல், வேதியியல் கடினம்?

இளநிலை நீட் தேர்வு! தயாராகக் காத்திருக்கும் மாணவர்கள்! | NEET

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
