மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொங்கலுக்கு வெளியாகும் பா. இரஞ்சித்தின் வேட்டுவம்!

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து...

Arya in the movie Vettuvam

வேட்டுவம் படத்தில் ஆர்யா - படம்: யூடியூப் / நீலம் புரடக்‌ஷன்ஸ்

Published On :31 அக்டோபர் 2026, 10:47 am IST

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் நீண்ட காலமாக வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ஆர்யா, விஆர் தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.

இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் கதாபாத்திரங்கள், கதை குறித்த விடியோ, ‘வேர்ட் ஆஃப் வேட்டுவம்’ என்கிற பெயரில் வெளியாகியது. பிரமிக்க வைக்கும் வகையில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், படம் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Summary

Pa Ranjith Vettuvam in theatres from Pongal 2027

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.