13: மீண்டும் திகில் கதையில் ஜி.வி. பிரகாஷ்

‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு மீண்டும் திகில் கதைக்களத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார்.

13 திரைப்பட போஸ்டர்
Published On :31 அக்டோபர் 2026, 6:10 pm IST

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய திகில் திரைப்படம் ‘13’. ஹாரர், திரில்லர் மற்றும் புலனாய்வு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு மீண்டும் திகில் கதைக்களத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள இப்படத்தில், கவுதம் வாசுதேவ் மேனன், பவ்யா திரிகா, கதிர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டு, மர்மமான சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைத் தேடும் புலனாய்வு அம்சங்களுடன் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் பிரபல யூடியூபராக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். அவரும் அவரது நண்பர்களும் எதிர்பாராத விதமாக சாத்தானின் பிடியில் சிக்கிக்கொள்ள அவர்களைச் சுற்றி அடுத்தடுத்து நிகழும் திகிலூட்டும் சம்பவங்கள் என்ன? அந்த மர்மங்களுக்குப் பின்னால் இருப்பது யார்? சாத்தானின் பிடியிலிருந்து அவர்கள் உயிருடன் மீண்டார்களா? என்பதே படத்தின் கதையாகும்.

அச்சம், குழப்பம், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் போராட்டம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் கவுதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

திகில் கற்பனை கதையை மையமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.