மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி! முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு...

manjanathi movie

மஞ்சணத்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. - Instagram

Published On :29 அக்டோபர் 2026, 9:04 pm IST

இயக்குநர் மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக உருவாகியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் “மஞ்சணத்தி” எனும் புதிய படத்தில் நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாது லோஹர், பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் “மஞ்சணத்தி” திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, படக்குழு இன்று (அக். 29) அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனியில் “மஞ்சணத்தி” படப்பிடிப்பை, இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கிவைத்தார். மேலும், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

திருநெல்வேலியில் இருந்து காஷ்மீர் வரை நிகழும் கதைகளத்துடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 90 நாள்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும், இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the first phase of filming for director Mari Selvaraj’s movie “Manjanathi” has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.