மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற கமல் ஹாசன்! எந்தத் திரைப்படம்?

ஹைதராபாத் சென்ற நடிகர் கமல் ஹாசன்....

நடிகர் கமல் ஹாசன்

Published On :28 அக்டோபர் 2026, 1:24 pm IST

நடிகர் கமல் ஹாசன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

மேலும், ரூ. 1000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில், முன்னணி கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், பிரபாஸ் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து, கல்கி - 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் பல நிபந்தனைகளை விதித்ததால் அவரைத் தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது.

மேலும், தீபிகா படுகோன் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் கமல் ஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு அவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Kamal Haasan has gone to Hyderabad for a film shoot.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.