மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒழுக்கம், அறிவு... அப்பாவை வாழ்த்திய நடிகர் கார்த்தி!

நடிகர் சிவகுமாரின் 85-வது பிறந்த நாள் இன்று....

தந்தை சிவகுமார், தாய் உடன் குழந்தை கார்த்தி!

Published On :27 அக்டோபர் 2026, 11:14 am IST

நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஆரோக்கியமான உடல்நலனாலும் யோகா மற்றும் சீரான வாழ்வியலாலும் என்றும் இளமையோடு திகழ்ந்து ‘மார்க்கண்டேய நடிகன்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் இன்று தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

1965-இல் ‘காக்கும் கரங்கள்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், 'சரஸ்வதி சபதம்', 'கந்தன் கருணை', 'சிந்து பைரவி', 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' 'சேது’ உள்ளிட்ட 190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் பன்முகக் கதாபாத்திரங்களிலும் நடித்து பல மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். திரையுலகிற்கு அப்பால் ஒரு மிகச்சிறந்த ஓவியராகவும், ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்ற இதிகாசங்களை மேடைகளில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்கிறார்.

1979 ஆம் ஆண்டு சிவகுமாரின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தற்போது, 47 ஆண்டுகளாக இது செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சிவகுமார் இன்று தன் 85-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ்த் திரையுலகினர் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில், நடிகரும் சிவகுமாரின் இளைய மகனுமான கார்த்தி, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா! உங்களின் ஒழுக்கம், நேர்மை, கனிவு, அறிவு மற்றும் நீங்கள் வாழும் கண்ணியமான வாழ்க்கை முறை அனைத்துமே எல்லா வகையிலும் ஒரு பொன்னான முன்மாதிரியாகத் திகழ்கின்றன.” எனத் தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Actor Karthi has shared birthday wishes for actor Sivakumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.