மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

துரந்தர் படத்தை நகலெடுத்த கிங்? ஷாருக்கானின் போஸ்டருக்கு கடும் விமர்சனங்கள்!

நடிகர் ஷாருக்கானின் கிங் படத்தின் போஸ்டர் பற்றிய விமர்சனங்கள் குறித்து...

Posters for the films 'King' and 'Thuranthar'

கிங், துரந்தர் படங்களின் போஸ்டர்கள் - படங்கள்: எக்ஸ் / ஷாருக்கான், ரன்வீர் சிங்.

Published On :27 அக்டோபர் 2026, 7:21 pm IST

நடிகர் ஷாருக்கானின் கிங் படத்தின் போஸ்டர் ரன்ப்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்தின் போஸ்டர் போலவே இருப்பதாக இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பதான் படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கிங் எனும் ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பதான் திரைப்படத்தின் மூலம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் கிங் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ரூ. 350 கோடியில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை வெளியாகிய இந்தப் போஸ்டர் துரந்தர் 2 படத்தின் போஸ்டரை நகலெடுத்தது போல இருப்பதாக ஷாருக்கானின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை இந்தாண்டு டிச. 24 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ஷாருக்கான் தனது மகள் சுஹானாவுடன் இணைந்து முதல்முறையாக நடித்து வருகிறார். இதனால் இந்தப் படம் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் போஸ்டருக்கு ”அப்படியேவா நகலெடுப்பது?” என கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் 2 உலகம் முழுவதும் ரூ.1,800 கோடி வசூலித்தது. ஏஐ வைத்து மட்டமாக உருவாக்கியுள்ளார்களெனவும் கிங் போஸ்டரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Summary

Shah Rukh's 'King' poster sparks online debate, netizens draw parallels with 'Dhurandhar 2'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.