மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேறும் உத்தரவு: இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் இம்ரான் கான்

Published On :27 அக்டோபர் 2026, 4:53 pm IST

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை கொண்டவர். ஆனால், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான இந்திய வெளிநாட்டு குடிமகன் எனப்படும் ஓசிஐ அட்டையையும் அவர் வைத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 10 அன்று, தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக மும்பையில் போராட்டம் நடைபெற்றது.

அதில், நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார். இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை கொண்டவரான இம்ரான் கான் இந்தியாவில் அரசியல் சார்ந்த போராட்டங்களில் பங்கேற்பது சட்டப்படி தவறு என்றும் விதிகளுக்குப் புறம்பானது என்றும் மும்பை பாஜக தலைவட் கிரிட் சோமையா காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் ’வெளிநாட்டவர் மண்டலப் பதிவு அலுவலகத்திற்கு’ அனுப்பப்பட்டது. அங்கிருந்து, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025 பிரிவு 7-ன் கீழ் இம்ரான் கானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் அவர் அக். 28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டது.

அந்த நோட்டீஸை எதிர்த்து இம்ரான் கான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், போராட்டத்தை தான் ஒருங்கிணைக்கவில்லை என்றும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காமல் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் காண மட்டுமே சென்றதாகவும் அவர் கூறினார்.

மேலும், தனது தரப்பின் நியாயத்தைக் கேட்காமல் உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவரது வாதத்தில் குறிப்பிடப்பட்டது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், அடுத்த விசாரணை நடைபெறும் நவ. 2 வரை இம்ரான் கான் மீது கட்டாய நடவடிக்கை அல்லது நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அக். 28-க்குள் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை நவ. 2 வரை நிறுத்திவைத்து இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Summary

Order for actor Imran Khan to leave India: Court grants an interim stay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.