தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜீவாவின் தகப்பன் படம் வெளியீட்டுத் தேதி!

நடிகர் ஜீவா நடித்துள்ள “தகப்பன்” படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

jiiva

தகப்பன் பட போஸ்டர்...

Published On :23 அக்டோபர் 2026, 8:00 pm IST

நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள “தகப்பன்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள புதிய படம் “தகப்பன்”. இப்படத்துக்கு, மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.

நடிகர் ஜீவா புதுமையான தோற்றத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் ரஜிஷா விஜயன், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் கேஷவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு “தகப்பன்” திரைப்படம் வரும் டிச.24 ஆம் தேதி வெளியாகும் என இன்று (அக். 23) படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, நடிகர் ஜீவாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான “தலைவர் தம்பி தலைமையில்” எனும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The release date of the film “Thagappan”, starring actor Jeeva, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.