மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

80-களின் ரசிகர்களைக் கவர்ந்த பிரமாண்ட காவியம்! புதிய வீர மகாபாரதம் பக்தித் தொடர்! எதில் பார்க்கலாம்?

வீர மகாபாரதம் பக்தித் தொடரின் ஒளிபரப்பு குறித்து...

Published On :21 அக்டோபர் 2026, 3:30 pm IST

கடந்த 1980-களின் ரசிகர்களைக் கவர்ந்த பிரமாண்ட காவியமான வீர மகாபாரதம் தொடர் சோனி விழா சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வியாசர் எழுதிய மகாபாதரதத்தை மையமாக வைத்து கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் குமார் மற்றும் அமர்பிரீத் ஆகிய இரு இயக்குநர்கள் மகாபாரதத்தை இயக்கினர்.

ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்டாலும், இந்தத் தொடரின் திரைக்கதை வடிவம் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்ததால், தமிழ் மொழியில் குரலாக்கம் செய்து விஜய் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பெரும்பாலும், இதிகாசத் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எப்போது ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், மகாபாரதம் தொடரைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

மகாபாரதம் தொடரில் கிருஷ்ணரின் உபதேசங்கள், துரியோதனன் சபையில் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்பது உள்ளிட்ட காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெறும். அர்ஜுனன், கர்ணன், பீஷ்மர், அஸ்வத்தாமன் உள்ளிட்ட பாத்திரங்கள் முக்கியமானவையாகும்.

இந்த நிலையில், அண்மையில் தொடங்கப்பட்ட சோனி விழா சேனலில் வீர மகாபாரதம் தொடர் அக். 20 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 முதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல, வீர மகாபாரதம் தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The epic Veera Mahabharata series, which has captivated audiences, is being broadcast on Sony Vizha Channel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.