மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

1 மணி ஒளிபரப்பாகும் அன்னம் தொடர்!

அன்னம் தொடரின் ஒளிபரப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

annam serial

அன்னம் தொடர் - படம்: விடியோ கிளிப்

Published On :19 அக்டோபர் 2026, 12:39 pm IST

அன்னம் தொடரின் ஒளிபரப்பு 1 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடரின் பிரதான பாத்திரங்களில் அயலி இணையத் தொடர் பிரபலம் அபி நட்சத்திரா, கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

மேலும், இத்தொடரில் பிரியங்கா ஷிவன்னா, மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மாமன் மகனான கார்த்திக்கை(பரத் குமார்) காதலிக்கும் அத்தை மகளான அன்னம்(அபி நட்சத்திரா), ஆனால் கார்த்திக், ரம்யாவை (பிரியங்கா ஷிவன்னா) விரும்புகிறார்.

சூழல் காரணமாக, கார்த்திக், அன்னத்தை திருமணம் செய்துகொள்கிறார். இதற்காக ரம்யா, கார்த்திக்கை பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து அன்னம் எவ்வாறு கார்த்திக்கை காப்பாற்றுகிறார் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரை தேவிபாலா திரைக்கதையில் மருது சங்கர் எழுத்தில் என். சுந்தரேஷ்வரன் இயக்கி வருகிறார். சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் அய்யன் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

அன்னம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 6.30 மணி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

கயல் தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், அன்னம் தொடர், அக். 26 ஆம் தேதி முதல் இரவு 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

The broadcast of the Annam series has been extended to 1 hour.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.