மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ. 475 கோடியில் கைலி ஜென்னர் அணிந்த உள்ளாடை..! தங்கம், வைரத்தால் மட்டுமே உருவாக்கம்!

அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கைலி ஜென்னர் அணிந்த ரூ. 475 கோடி மதிப்பு மிக்க உள்ளாடை குறித்து...

Kylie Jenner, $50 Million The Angel Fantasy Bra

நடிகை கைலி ஜென்னர் அணிந்த உள்ளாடை. - படங்கள்: இன்ஸ்டா / கைலி ஜென்னர், விக்டோரியா சீக்ரெட்

Published On :21 அக்டோபர் 2026, 7:31 pm IST

அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கைலி ஜென்னர் (29 வயது) அணிந்த 50 மில்லியன் டாலர் விலை மதிப்புமிக்க உள்ளாடை சமூக வலைதளங்களில் பெண்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இந்த உள்ளாடை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 475 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உள்ளாடையில் 4,410 வைரங்கள்,18 ஆயிரம் தங்கத்தினால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கைவினை கலைஞர்கள் வேலை செய்துள்ளார்கள்.

தொலைக்காட்சி நடிகையான கைலி ஜென்னர், அழகு சாதன தொழில்முனைவோராக மாறினார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே 380 மில்லியன் (38 கோடி) ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

விக்டோரியா ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்காக ஜேக்கப் அரபோ தலைமையில் ஆடம் செல்மன் உடன் இணைந்து இந்த உள்ளாடையை வடிவமைக்கப்பட்டுள்ளது. துணிகளே இல்லாமல் வெறுமனே தங்கமும் வைரமும் மட்டுமே வைத்து உருவாக்கியுள்ளார்கள்.

இந்த உள்ளாடையை உருவாக்க 15 கைவினை கலைஞர்கள் 1,000க்கும் அதிகமான மணி நேரங்கள் உழைத்துள்ளார்கள். இதில் 4, 410 இயற்கையான வைரங்கள் (1,373.39 கேரட்) 3,218 கூறுகளாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த உள்ளாடையின் நடுவில் 75.54 கேரட் விவிட் மஞ்சள் நிற வைரம் வைக்கப்பட்டுள்ளது. இதன் நிறத்துக்காக மிக உயர்ந்த தரத்திலான வைரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜேக்கப்பின் வழக்கமான ’ஆங்கிள் கட்’ இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இதனை வடிவமைத்த ஜேக்கப், “விக்டோரியா சீக்ரெட் தன்னம்பிக்கை, அழகு, தங்களது வெளிப்பாட்டின் சுதந்திரத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர்களின் பிராண்ட் அமெரிக்காவின் கலாசாரத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது. அதனால்தான் அமெரிக்க பேஷன் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.

மிகப்பெரிய கனவு, இடர்களை எதிர்கொள்ளுதல், இதுவரை யாரும் பார்த்திராத ஒன்றை உருவாக்குதல் என்ற சுதந்திரம் இதில் இருக்கிறது” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக 35 மில்லியனுக்கு ஓர் உள்ளாடை உருவாக்கப்பட்டிருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது. தற்போது இந்த சாதனை உடைக்கப்பட்டு விக்டோரியா சீக்ரெட் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த உள்ளாடையை அவர்கள் ‘ஏஞ்சல் ஃபேன்டஸி பிரா’ (தேவதையின் கற்பனை உள்ளாடை) எனக் கூறுகிறார்கள்.

Summary

Kylie Jenner Debuts on the Victoria’s Secret Runway in its $50 Million The Angel Fantasy Bra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.