தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆளே காணோம்... என்ன ஆனார் ரித்திகா சிங்?

நடிகை ரித்திகா சிங்கின் தற்போதைய நிலை குறித்து...

நடிகை ரித்திகா சிங்

Published On :20 அக்டோபர் 2026, 4:46 pm IST

நடிகை ரித்திகா சிங் திரைப்பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழில் 'இறுதிச்சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார். பெரும்பாலும் வெற்றிப்படங்களைக் கொடுத்ததால் தமிழில் பெரிய நடிகையாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மெல்ல மெல்ல ரித்திகாவுக்குப் பின் நடிக்க வந்த நாயகிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ள சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார்.

இடையே, ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும், வேட்டையன் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதனிலும் நடித்தார். ஆனால், எதுவும் பெரிய வாய்ப்புகளாக மாறவில்லை.

 ரித்திகா சிங்

ரித்திகா சிங்

இதனால், கடந்த 2 ஆண்டுகளாக ரித்திகா சிங் எந்தத் திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார். நாயகியாக நடித்தவர் சிறப்பு நடனம், கதாபாத்திர நடிகையாக இறங்கி வந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் மனம் தளராத ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் புகைப்படங்களைக் கவர்ச்சியாகவும் ரசிகக்கூடிய வகையிலும் வெளியிட்டுதான் வருகிறார். பாக்ஸிங் தெரிந்த நடிகை என்பதால் ஏதாவது ஆக்‌ஷன் கதைகள் கிடைக்குமா என்றும் காத்திருக்கிறாராம்!

Actress Ritika Singh is currently waiting for film opportunities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.