பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரங்கம் நிறையும் காட்சிகள்... ஆயிரம் கோடியை நெருங்குமா ஜெயிலர் - 2?

ஜெயிலர் - 2 வசூல் குறித்து...

நடிகர்கள் ரஜினிகாந்த், நமோ நாராயணன்

Published On :20 அக்டோபர் 2026, 4:02 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்ததால் திரைகளும் காட்சிகளும் அதிகரித்தன. மேலும், சில மணிநேரங்களில் லட்சக் கணக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையும் நிகழ்ந்தது.

நகைச்சுவை, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

ஆச்சரியமாக, இப்படம் கடந்த 5 நாள்களிலேயே ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல திரையரங்க உரிமையாளர்களும் டிக்கெட்கள் அதிக அளவில் கேட்கப்பட்டு வருவதாகவும் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை பார்க்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், வசூல் கணிப்பாளர்கள் ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 750 கோடி வசூலைக் கடந்துவிடும் என்றும் சூழ்நிலை சரியாக அமைந்தால் ஆயிரம் கோடியை நெருங்கவும் வாய்ப்புள்ளது எனக் கூறி வருகின்றனர். ஹிந்தியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பாக ரூ. 1000 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரை இப்படம் பெற்றிருக்கலாம்!

Actor Rajinikanth's Jailer 2 is heading towards a huge success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.