மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காதலில் பிரிவும் அழகானதுதான்: அனுபமா பரமேஸ்வரன்

காதல் பிரிவு குறித்து அனுபமா...

அனுபமா பரமேஸ்வரன்

Published On :12 அக்டோபர் 2026, 5:01 pm IST

நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலில் பிரிவு குறித்து பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நீண்ட காலமாக நடிகர் துருவ் விக்ரமுடன் இணைத்துப் பேசப்பட்டு வந்த நிலையில்தான்,அனுபமா நேர்காணல் அளித்தார்.

அதில், “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.

அந்த காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, என் உடல் எடையைக் குறைத்தேன்.
எனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் போராட்டங்களும் உள்ளன.” என்றார். மேலும், அந்தக் காதலர் ஒருநாள் அந்நியன் இன்னொரு நாள் ரெமோ என தான் அனுபவித்த வலிகளைக் கூறினார்.

தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான கிரேஸி கல்யாணம் வருகிற அக். 16 ஆம் தேதி வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட அனுபமாவிடம் காதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “காதலும் அழகுதான். அதேநேரம், பிரிவும் அழகானதுதான். நீங்கள் அதிலிருந்து எதை உணர்ந்தீர்கள் என்பதைப் பொறுத்துதான்” என்றார்.

Actress Anupama Parameswaran has spoken about a breakup in her relationship.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.