மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டமும் நீதியும் - 2 இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி!

சட்டமும் நீதியும் - 2 இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி குறித்து...

இணையத் தொடர்

சட்டமும் நீதியும் - 2 இணையத் தொடர் - படம்: எக்ஸ்

Published On :7 அக்டோபர் 2026, 6:59 pm IST

சட்டமும் நீதியும் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நாயகனாக வெற்றிப் பெற்ற நடிகர்களில் கவனிக்கப்பட்ட சரவணன், பருத்தி வீரன் படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டார். அதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து, நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவான சட்டமும் நீதியும் என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார். நாயகியாக நம்ரிதா நடித்திருந்தார்.

குற்ற வழக்கு, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் கடந்தாண்டு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், சட்டமும் நீதியும் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தினை, முதல் பாகத்தை எடுத்த பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

முதல் பாகத்தில் வழக்குரைஞராக நடித்த நடிகர் சரவணன், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதில், மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வழக்குரைஞராக நடிகை வரலட்சுமி நடிக்கிறார்.

மேலும் லாவண்யா மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் இந்தப் புதிய பாகத்தில் நடிக்கிறார்கள். 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் இந்தத் தொடரை தயாரிக்கிறார்.

சட்டமும் நீதியும் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் வரும் அக். 23 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The release date for the second part of the sattamum needhiyum web series has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.