மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நிறைவடைகிறது பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடர்! படப்பிடிப்பு நிறைவு!

பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடர் நிறைவடையவுள்ளது தொடர்பாக...

web series

'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர் - படம்: X/jio hotstar

Published On :23 அக்டோபர் 2026, 12:12 pm IST

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ இணையத் தொடர் விரைவில் நிறைவடைகிறது.

இந்தத் தொடரில் காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், லுதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், சித்தார்த் பாபு, பிரமோதினி, நம்ரிதா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

போலீஸ் போலீஸ் மற்றும் வேர மாரி லவ் ஸ்டோரி இணையத் தொடர்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிதம்பரம் மணிவண்ணன் இந்தத் தொடரை இயக்கி வருகிறார்.

வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் 4 சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்தில் நிகழும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி, நகைச்சுவை கலந்து இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

இந்த இணையத் தொடருக்கு மணிகண்டன் ராமமூர்த்தி ஒளிப்பதிவை மேற்கொண்டு வருகிறார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனால், இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒருசில வாரங்களில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Summary

The web series 'Brothers and Sisters', starring actor and director Bose Venkat in the lead role, will soon be completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.