மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

6 மணி காட்சிகளுக்கு அனுமதி: முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதற்காக முதல்வர் விஜய்க்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது குறித்து...

Chief Minister Vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :3 நவம்பர் 2026, 9:40 pm IST

6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதற்காக முதல்வர் விஜய்க்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடிட்டில் புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடவும் சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொதுவிடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிடவும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்த் திரைப்படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்த் திரையுலகிற்கு சமமான வாய்ப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி.

2023 ஜனவரி மாதத்தில் பிரபலமான ஒரு திரையரங்கில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலை 5 மணி மற்றும் 6 மணி காட்சிகள் நிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழ் திரைப்படங்கள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டு வந்த நிலையிலும், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே திரைப்படங்கள் தொடங்கும் சூழல் ஏற்பட்டது.

இதனால், தமிழ்த் திரைப்படங்களுக்கு மற்ற மாநிலங்களுடனும், வெளிநாடுகளுடனும் சமமான வெளியீட்டு வாய்ப்பு இல்லாத நிலை உருவானது.

இந்த முக்கியமான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒருமித்த குரலில், தமிழ்நாட்டிலும் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.

இந்தக் கோரிக்கையை மிகுந்த அக்கறையுடன் பரிசீலித்த தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன், எங்களது கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் நலனில் அக்கறை கொண்டு, இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும் அமைச்சருக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

Summary

The Tamil Film Producers Council expressed its gratitude to the Chief Minister on Tuesday (Nov. 3) for granting permission for 6 a.m. screenings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.