தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் நம்பகத்தன்மை அதன் நடுநிலையான அணுகுமுறையில் உள்ளது: இந்தியா

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் நம்பகத்தன்மை அதன் நடுநிலையான அணுகுமுறையில் உள்ளது என இந்தியா தெரிவித்தது.

பாவிகா மங்களாநந்தன்

Published On :1 நவம்பர் 2026, 1:47 am IST

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் நம்பகத்தன்மை அதன் நடுநிலையான அணுகுமுறையில் உள்ளது என இந்தியா தெரிவித்தது.

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் அறிக்கை மீது ஐ.நா.பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் முதன்மைச் செயலா் பாவிகா மங்களாநந்தன் பேசியதாவது:

ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் மீதான நம்பகத்தன்மை அதன் நடுநிலையான அணுகுமுறையில் உள்ளது. ஒரு நாட்டின் பங்களிப்பின்றி அந்த நாட்டுக்கென வகுக்கப்படும் விதிகள் பலனளிப்பதில்லை.

அனைத்து நாடுகளின் ஒத்துழைப்போடு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் ‘உலகளாவிய மதிப்பாய்வு’ மட்டுமே அனைத்து உறுப்பினா்களையும் சமமாக நடத்தும் தளமாக திகழ்கிறது.

வாழ்வுரிமை மற்றும் மனித உரிமையை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை சமரசமின்றி அணுகுவதில் இந்த கவுன்சில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கு நிகராக பொருளாதார, சமூக, கலாசார மற்றும் மேம்பாட்டு உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வறுமை, கடன், நிதி மற்றும் தொழில்நுட்ப அணுகலுக்கான குறைந்த வளங்களே வளா்ந்து வரும் நாடுகளில் மனித உரிமைகளுக்குத் தடையாக உள்ளது. இதை சீரமைக்க சா்வதேச அளவில் ஒத்துழைப்புத் தேவை.

ஐ.நா.பொதுச் சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரே விவகாரம் குறித்த தீா்மானங்கள் மற்றும் முன்னெடுப்புகளை தவிா்ப்பதற்கான நடைமுறைகளை பரிசீலிக்க வேண்டும். மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தன்னாா்வ பங்களிப்புகளைவிட குறிப்பிட்ட கால இடைவெளியில் போதிய நிதி உதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

Summary

UN The credibility of the Human Rights Council lies in its neutral approach: India

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.