பிரபல மலையாள நடிகை பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மலையாளத்தில் குணச்சித்திர நடிகையாக கவனம் பெற்றவர் நடிகை அஞ்சலி நாயர். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானவர் 80 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். த்ரிஷ்யம் - 2 திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சில காட்சிகளில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.
மேலும், தமிழில் நெல்லு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து, அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அம்மாவாக நடித்தார்.
நடிகர் சித்தார்த்துடன் சித்தா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அப்படத்திற்காக நல்ல பாராட்டுகளுக்கும் அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், டிவெண்டி 20 என்கிற கட்சியைச் சேர்ந்த அஞ்சலி நாயர் திருப்பணித்துறா வேட்பாளராக பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறார். இதே கட்சியைச் சார்ந்த லட்சுமி பிரியா, வீணா நாயர் ஆகிய நடிகைகளும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் வருகிற ஏப். 9 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி டிவெண்டி 20 கட்சிக்கு 20 இடங்களை ஒதுக்கியிருக்கிறது.
Summary
actor anjali nair joins NDA alliance and contest in kerala assembly election 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்.எல்.ஏ-வாக வெற்றி! எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் சி.வி. சண்முகம்!!

தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோல்வி!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

திருவனந்தபுரத்தில் கரமன ஜெயனை களமிறக்கும் பாஜக!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
