மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தாயைத் தெய்வமாக அல்ல, மனுஷியாக பாருங்கள்: இயக்குநர் சசி

நூறு சாமி குறித்து இயக்குநர் சசி...

News image

நூறு சாமி

Updated On :28 மார்ச் 2026, 8:57 pm IST

இயக்குநர் சசி நூறு சாமி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சசி இயக்கிய நூறு சாமி திரைப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிச்சைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியும் சசியும் இணைந்த திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இப்படம் தாயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் பிச்சைக்காரன் எந்த அளவிற்குப் பேசப்பட்டதோ அதே அளவு பேசப்படலாம் என்றும் தெரிகிறது.

முக்கியமாக, இப்படத்தைப் பார்த்த இயக்குநர் சுப்ரமணியன் சிவா, ‘நூறு சாமி திரைப்படத்துக்குக் குறைந்தது 4 தேசிய விருதுகளாவது கிடைக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, “ஒரு மகன் தன் அம்மாவைச் சாமியாக பார்த்தால் அது பிச்சைக்காரன். ஒரு மகன் தன் அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் அது நூறு சாமி. பெற்ற தாயைக் கடவுளாக ஆராதித்துக் கொண்டாடுகிறோம். அப்படியான தாயை மனுஷியாகவும் பாருங்கள் என்பதையே நூறு சாமி கூறுகிறது. இக்கதையைக் கேட்டதுமே விஜய் ஆண்டனிக்கு பிடித்துவிட்டது. கதைக்காக தன்னை இதில் இணைத்துக்கொண்டார். நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்துள்ளார். பேரன்போடும் பெரும் துணிவோடும் ஒரு அம்மாவைத் திரையில் கட்டமைக்க முயற்சி செய்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

director sari spokes about his new movie nooru samy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.