துரந்தர் திரைப்படம் குறித்து நடிகை தீபிகா படுகோன் எந்த வாழ்த்துகளையும் பகிராதது ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர், துரந்தர் தி ரிவென்ஞ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதில் முதல் பாகம் ரூ. 1400 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான துரந்தர் இரண்டாம் பாகமான ரிவென்ஞ்-ம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றதுடன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் இதுவும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், ரசிகர்களிடம் புதிய குழப்பமும் எழுந்துள்ளது. நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் ரன்வீருக்கு மிகப்பெரிய வெற்றியைத் துரந்தர் படங்களே கொடுத்திருக்கின்றன.
முக்கியமாக, பாலிவுட்டில் ஷாருக்கானுக்குப் பின் ஆயிரம் கோடி பட்டியலில் இணைந்த நடிகர் என்கிற பெயரையும் ரன்வீர் அடைந்துள்ளார்.
ஆனால், துரந்தர் குறித்து நடிகையும் ரன்வீரின் மனைவியுமான தீபிகா படுகோன் தன் சமூக வலைதளப் பக்கங்களில் ஏன் ஒரு வாழ்த்துப் பதிவு கூட பதிவு செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Summary
deepika padukone didn't post anything about dhurandhar and his husband ranveer singh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பான் மொழியில் வெளியாகும் துரந்தர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

தமிழுக்கு வருவாரா சாரா அர்ஜுன்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

