கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக 3 திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவின் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தென்னிந்திய சினிமாவில் அதிக தொகையை முதலீடு செய்து வருகிறது.
முக்கியமாக, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர். விஜய்யின் சம்பளம், உருவாக்கம் என ரூ. 400 கோடி வரை இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அதேபோல், நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படமும் ரூ. 500 கோடிக்கும் அதிகமான செலவிலேயே உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கன்னட படமான கேடி தி டெவில் (KD the devil) திரைப்படமும் பெரிய பொருள் செலவிலேயே உருவாகியுள்ளது. இம்மூன்று திரைப்படங்களையும் கேவிஎன் நிறுவனமே ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து தயாரித்துள்ளது.
ஆனால், இன்னும் ஜன நாயகன் தணிக்கை வாரிய பிரச்னைகளால் வெளியாகமால் இருக்க, டாக்ஸிக் திரைப்படம் வருகிற மார்ச் 19 வெளியாக இருந்து, பின் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆக்சன் அதிரடி படமாக உருவான கேடி தி டெவில் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
சினிமாவில் அதிரடியாக பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து திரும்பிப் பார்க்க வைத்ததுடன் ரூ. 1000 கோடியை முதலீடு செய்துள்ள இந்நிறுவனம் அடுத்தடுத்து என்னென்ன திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளது எனக் கேள்விகள் எழுந்து வருகின்றன!
Summary
kvn productions invests more than rs. 1000 crores in jana nayagan, toxic and kd the devil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து!

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


