தமிழ்த் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட கே. பாக்யராஜ் மறைந்தார் என்ற செய்தி அவரது ரசிகர்களையும், தமிழ்த் திரையுலகினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் தனக்கென தனிப்பாணியை பின்பற்றி படங்களை இயக்குவதில் வல்லவரான பாக்யராஜ் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்டார்.
கடந்த சில நாள்களாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 10ஆம் தேதி இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்த நிலையில், இரண்டு வாரங்களில், அவரது சீடர் கே. பாக்யராஜ் மறைந்திருப்பது ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் பாக்யராஜ்.
1979ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான கே. பாக்யராஜ், முந்தானை முடிச்சு, மௌன கீதங்கள், அந்த 7 நாள்கள் உள்ளிட்ட படங்களின் மிக சிறப்பான திரைக்கதை மூலம் தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றிருந்தார்.
தமிழ்த் திரையுலகுக்குள் நுழைந்து, கடந்த 48 ஆண்டுகளில் 75 படங்களில் கதாயகன், தந்தை, குணச்சித்திரைப் பாத்திரங்களில் நடித்துள்ளார், 25 படங்களை இயக்கியிருக்கிறார். திரைக்கதை மன்னன் பாக்யராஜின் சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பது அனைவரையும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
Summary
Bhagyaraj, known as the 'King of Screenplay' in the Tamil film industry, has passed away!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ் திரைப்பட ஆளுமை கே. பாக்யராஜ் காலமானார்: தலைவர்கள் இரங்கல்
குரு - சீடர்! தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய பாரதிராஜா - பாக்யராஜ்!

சொல்லப் போனால்... நிலைத்திருக்கும் அந்தக் கற்சிற்பத்தின் குரல்!

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினியின் 'தர்மன்' போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

