முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

முதல்வர் விஜய் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்தவில்லை? ரஜினிகாந்த் பதில்!

முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து குறித்து கேள்விக்கு ரஜினி பதில்...

News image

முதல்வர் விஜய், நடிகர் ரஜினிகாந்த்

Updated On :1 மணி நேரம் முன்பு

நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் தர்மன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை டிராகன் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சண்டை - அன்பறிவு.

இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு கிளம்பிய போது, நடிகர் ரஜினிகாந்த்திடம், “முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ரஜினி, “பேசிவிட்டேன்... பேசிவிட்டேன்...” என பதிலளித்தார். இதனால், செல்போனில் அழைத்து முதல்வரை வாழ்த்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

தர்மன் நிகழ்வில் பேசிய ரஜினி, “பேச அழைக்கிறோம் எனச் சொன்னலே தயக்கமாக இருக்கிறது. காரணம், நான் பேசினால் மற்றவர்களுக்கும் பிரச்னை, எனக்கும் பிரச்னை. ஏதாவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள். நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேன் என்கிறார்? வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா? என்பார்கள். பேசினால், “ஆமாம், இப்ப பேசு” எனக் கிண்டல் அடிப்பார்கள். ரொம்ப நாள் கழித்துதான் ஒன்றை தெரிந்துகொண்டேன், நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது; நமக்குப் பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.” என்றது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth has responded to a question regarding Chief Minister Vijay's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.