விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடிகர் ஜெகதீஷ் ஸ்ரீநாத் இணைந்துள்ளார்.
கூட்டு குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இந்தத் தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த 2023 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, இல்லத்தரசிகள் மட்டுமின்றி அனைத்து தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கும் தொடராக சிறகடிக்க ஆசை உள்ளது.
சிறகடிக்க ஆசை தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தத் தொடரில் திடீர் திருப்புமுனையாக, நடிகர் ஜெகதீஷ் ஸ்ரீநாத், மிஸ்ரா என்ற பாத்திரத்தில் இணைந்துள்ளார். இவரின் வருகை தொடரில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாடல் மற்றும் குரல் கலைஞரான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வரனே அவஷ்யமுண்டு படத்தில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் ரவி மோகனின் பூமி மற்றும் அகிலன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
Summary
Actor Jagadeesh Srinath has joined the serial Siragadikka Aasai, which is being aired on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

ஆடுகளம் தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!

1000 நாள்களைக் கடந்த சிறகடிக்க ஆசை தொடர்!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு


