ஆடுகளம் தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஜீவா ராஜேந்திரன் இணைந்துள்ளார்.
நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரில் அவருக்கு ஜோடியாக சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார்.
மேலும், முக்கிய பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கடந்தாண்டு ஏப். 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆடுகளம் தொடர் இரவு நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்னர் நான் பிரைம் எனப்படும் மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே ஆடுகளம் தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது, இதனால், ஆடுகளம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்தத் தொடரில் பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் ஜீவா ராஜேந்திரன் இணைந்துள்ளார். இவர் ஆடுகளம் தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
நடிகர் ஜீவா பாக்கியலட்சுமி தொடரில் நித்திஷ் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவர், கயல் தொடரில் அன்பு பாத்திரத்தில் நடித்தன் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார். இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
தற்போது, ஆடுகளம் தொடரில் நடிகர் ஜீவா இணைந்துள்ளது, கதையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Actor Jeeva from the Baakiyalakshmi serial has joined the Aadukalam series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே தொடரில் 3 காதல் கதைகள்! வித்தியாசமான பாணியில் எடுக்கப்படும் புதிய சீரியல்!

மீண்டும் மகாநதி தொடரில் கமருதீன்!

நிறைவடைகிறது ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடர்!

விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


