சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடரில் நடிகை திவ்யா விஜயகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தொடர் கடந்த 2023 அக்டோபர் 9 ஆம் தேதிமுதல் 850 நாள்களைக் கடந்து, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிராமத்தில் பிறந்த விவசாயியின் மகள், ஆட்சியராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்படுகிறது.

இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணே கலைமானே தொடரை இயக்கிய தனுஷ், சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார்.
மேலும் இந்தத் தொடரில் அமல்ஜித், தர்ஷக் கெளடா, விஜே பவித்ரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வாரத்தின் ஏழு நாள்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிங்கப் பெண்ணே தொடரில் யாழினி பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திவ்யா விஜயகுமார் மாற்றம் செய்யப்பட்டு, நடிகை சத்யா நடிக்கவுள்ளார்.
மாடல் மற்றும் தொகுப்பாளரான இவர், சிங்கப்பெண்ணே தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவரின் வருகை தொடரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Regarding the replacement of actress Divya Vijayakumar in the serial 'Singa Penne'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறகடிக்க ஆசை தொடரில் இணைந்த பிரபல திரைப்பட நடிகர்!

கயல் தொடரில் மறைந்த சுபாஷினிக்குப் பதில் ரோஜா சீரியல் நடிகை!

ஆடுகளம் தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

ஒரே தொடரில் 3 காதல் கதைகள்! வித்தியாசமான பாணியில் எடுக்கப்படும் புதிய சீரியல்!
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை


